Monday, December 11, 2017

ஹொய்ச்சாள கலைவெளியில்

கிபி 10ம் முதல் 14ம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தை ஹொய்ச்சாளர்கள் ஆண்டு வந்தார்கள். பேலூர் மற்றும் ஹெலேபீடை மையமாகக் கொண்ட ஹோய்சாளர்களின்  அரசு 1200களில் அதன் உச்சத்தை அடைந்தது. அந்த சமயத்தில் சிற்பக்கலைத்திறன் மிக்க பல கோயில்களும் கோட்டைகளும் அமைக்கப்பெற்றன.

ஈரோட்டிலிருந்து கிளம்பி அந்தியூர், தாமரைக்கரை வழியாக கர்நாடகத்தில் நுழைந்து ஹோய்சாளர்களின் காலத்து கோயில்களையும் கலைப்படைப்புகளையும் காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டது. மொத்த பயண தூரம் ஏறத்தாழ 850 கி.மீ.


மொத்தமாக 6 கட்டுரைகளில் ஜெயமோகன் தனது பயண அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார்.


பயணக்கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


ஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு : http://www.jeyamohan.in/78548#.Wi5sboSH9j4

ஹொய்ச்சாள கலைவெளியில் – 1 : http://www.jeyamohan.in/78601#.Wi5sQISH9j5
ஹொய்ச்சாள கலைவெளியில் – 2 : http://www.jeyamohan.in/78619#.Wi5s0ISH9j4
ஹொய்ச்சாள கலைவெளியில் – 3 : http://www.jeyamohan.in/78631#.Wi5s_4SH9j4
ஹொய்ச்சாள கலைவெளியில் – 4 : http://www.jeyamohan.in/78661#.Wi5tQ4SH9j4
ஹொய்ச்சாள கலைவெளியில் – 5 : http://www.jeyamohan.in/78710#.Wi5tR4SH9j4
ஹொய்ச்சாள கலைவெளியில் – 6 : http://www.jeyamohan.in/78718#.Wi5tS4SH9j4

ஈரோட்டிலிருந்து கிளம்பி அந்தியூர், தாமரைக்கரை வழியாக கொள்ளேகாலை அடைந்து அங்கிருந்து சோமநாதபுராவின் சென்ன கேசவ கோயிலலைப் பார்த்தால். 1268ல் ஹொய்ச்சள சக்கரவர்த்தி இரண்டாம் நரசிம்மரின் தளபதியான சோமா என்பவரால் கட்டப்பட்ட ஆலயம் இது.


சோமநாதபுராவிலிருந்து பசலூரு சென்று ஹொய்ச்சள மன்னர் இரண்டம் வீரநரசிம்மரின் படைத்தலைவனாகிய ஹரிஹர தண்டநாயகனால் 1234ல் கட்டப்பட்ட மல்லிகார்ஜுனர் ஆலயத்தைப் பார்த்தால்.


பின், நாகமங்கலாவில் உள்ள சௌம்யநாராயணர் கோவிலைக் பார்த்துவிட்டு நுக்கெஹள்ளியின் லட்சுமிநரசிம்ம ஆலயத்தைப் பார்த்தல். இந்த ஆலயம் 1246ல் ஹொய்ச்சள சக்கரவர்த்தி வீரசோமேஸ்வரரின் படைத்தலைவன் பொம்மண்ண தண்டநாயகனால் கட்டப்பட்டது. நுக்கெஹள்ளியில் அருகில் இருக்கும் சதாசிவர் கோயில் பார்த்தல்.


பின், அரிசிக்கரே சென்று அங்குள்ள ஈஸ்வர ஆலயத்தை மற்றும் கேசவ ஆலயத்தைக் காணுதல். ஹார்ன்ஹள்ளி என்னும் ஊரிலுள்ள லக்ஷ்மி நாராயண ஆலயம் அடுத்தபடியாக. ஹொய்ச்சாள மன்னர் வீர சோமேஸ்வரரால் 1235ல் கட்டப்பட்டது இந்த ஆலயம். இந்த ஆலயத்தின் மிக அருகே சோமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.


அடுத்ததாக புச்சேஸ்வர ஆலயம் இது கொவரங்களா என்ற ஊரில் அமைந்திருக்கிறது 1173ல் புச்சி அல்லது புச்சி ராஜா என்ற பேரில் ஹொய்ச்சாள தளபதியால் அமைக்கப்பட்டது.இங்கிருந்து கிளம்பி தொட்டஹடஹள்ளியில் அமைந்த லட்சுமி தேவி ஆலயத்தைக் காணுதல். ஹொய்ச்சாள மாதிரிகளில் பழமையான ஆலயங்களில் ஒன்றாகிய லட்சுமி தேவி ஆலயம் கல்கண ரஹுத்தா என்ற வைர வணிகராலும் அவருடைய மனைவியாகிய சகஜா தேவியாலும் கட்டப்பட்டது.


பின், பெலவாடி வீர்நாராயண ஆலயத்திற்கு செல்லுதல். பிரம்மாண்டமான இந்த ஆலயம் கி.பி.1200ல் ஹொய்ச்சாள மன்னர் இரண்டாம் வீரவல்லாளர் ஆட்சிக் காலத்தில் கட்ட ஆரம்பித்து அவரது மைந்தனின் காலத்தில் முடிக்கப்பட்டது. அங்கிருந்து கிளம்பி, ஜவகலின் லட்சுமிநரசிம்ம சுவாமி ஆலயத்திற்குச் செல்லுதல். 1250ல் ஹொய்ச்சள மன்னர் வீரசோமேஸ்வரரால் கட்டப்பட்டது இந்த ஆலயம். பின், ஹளபீடுவில் உள்ள காதரேஸ்வரர் ஆலயத்தையும் சமணர்கோயிலையும் பார்த்தல்.


அடுத்ததாக, மொசாலே நாகேஸ்வரர் ஆலயம் மற்றும் சென்னகேசவர் ஆலயம். கிபி 1200 ல் ஹொய்ச்சல மன்னர் இரண்டாம் வீர வல்லாளரால் கட்டப்பட்டது இந்த இரட்டை ஆலயம். மொசாலே ஆலயத்திற்கு அப்பால் ஏரிக்குச்செல்லும் வழியில் ஓர் ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. அதையும் பார்த்துவிட்டு கோவிந்த ஹள்ளியில் அமைந்த பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம் செல்லுதல்.அங்கிருந்து செல்லும் வழியிலேயே கிக்காரே பிரம்மேஸ்வரர் ஆலயம் சென்று பார்த்தல்.


அங்கிருந்து ஹொசஹலலுவில் உள்ள லட்சுமிநாராயணர் ஆலயத்தை பார்க்க செல்லுதல். 1250ல் ஹொய்ச்சால மன்னர் வீரசோமேஸ்வரரால் கட்டப்பட்டது இது. மிக பிரமாண்டமான இந்த கோவிலை பார்க்க மட்டும் ஒரு நாள் போதாது. பயணத்தின் இறுதியாக அந்தியூரை வந்தடைதல்.



பயண பாதையை கூகிள் வரைபடத்தில் காண இங்கே சொடுக்கவும்.

தோராயமான பயண வரைபடம்:




1 comment:

அருகர்களின் பாதை

ஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து துவங...