Tuesday, December 12, 2017

சஹ்யமலை மலர்களைத்தேடி

மேற்கு இந்தியாவில் குஜராத் எல்லையில் துவங்கி கன்னியாகுமரி வரை நீண்டு கிடைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகள், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சஹ்யமலை (The Benevolent Mountains) என்று அழைக்கப்படுகிறது.

பெங்களூருவில் தொடக்கி சஹ்யமலையின் சதாரா அருகே காஸ் என்னும் இடத்தில் உள்ள புகழ்பெற்ற காஸ் பத்தர் மலர்ச்சமவெளியைக் காணும்பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. பயண பாதையில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் உள்ள இன்னும் சில இடங்களைக் காணும் வகையில் திட்டம் தொகுக்கப்பட்டுள்ளது.


மொத்த பயண தூரம் ஏறத்தாழ 2000 கி.மீ.


பயண அனுபவங்கள் 5 கட்டுரைகளாக கிடைக்கின்றன. கட்டுரைகளை வாசிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.


சஹ்யமலை மலர்களைத்தேடி – 1 : http://www.jeyamohan.in/79754#.Wi-RtISH9j5

சஹ்யமலை மலர்களைத்தேடி – 2 : http://www.jeyamohan.in/79784#.Wi-R4YSH9j4
சஹ்யமலை மலர்களைத்தேடி – 3 : http://www.jeyamohan.in/79804#.Wi-R54SH9j4
சஹ்யமலை மலர்களைத்தேடி – 4 : http://www.jeyamohan.in/79827#.Wi-SAoSH9j4
சஹ்யமலை மலர்களைத்தேடி – 5 : http://www.jeyamohan.in/79841#.Wi-SFISH9j4

பெங்களூரில் துவங்கி சாலை வழியாக திட்டமிடப்பட்ட இப்பயணத்தின் முதல் நிறுத்தமாக வரலாற்று சிறப்பு மிக்க சித்ரதுர்க்கா கோட்டையை பார்த்தல். அங்கிருந்து ஹவேரி என்னும் ஊரில் உள்ள 12 ஆம் நூற்றாண்டில் மேலைச்சாளுக்கியர்களால் கட்டப்பட்ட சித்தேஸ்வரா கோயிலைக் காணுதல்.


பின் சிர்ஸி செல்லும் வழியில், 1678-1718 காலகட்டத்தில் சிர்ஸியை ஆண்ட சதாசிவராயர் என்பவரால்  அமைக்கப்பட்ட சகஸ்ரலிங்கம் என்னும் இடத்தை பார்த்துவிட்டு ஹூப்ளி சென்று தங்குதல்.


ஹூப்ளியில் நேராக சதாராவை அடைந்து அங்கிருந்து காஸ் என்னும் இடத்தில் உள்ள புகழ்பெற்ற காஸ் பத்தர் மலர்ச்சமவெளியை காணுதல்.

அங்கிருந்து கிளம்பி புனே அருகே உள்ள மகாபலேஸ்வர் நோக்கி பயணம். மகாபலேஸ்வரில் உள்ள முக்கியமான ஐந்துநதிகளின் ஆலயத்தை பார்த்தல். பின் பஞ்சகன் என்னும் ஊரில் இருந்து மகாபலேஸ்வர் நகரத்தை பார்த்தல்.

அடுத்ததாக கர்நாடக எல்லையிலுள்ள அம்போலிகாட்என்னும் இடத்தை நோக்கிய பயணம். வழியில் தோஸிகர் அருவியை காணுதல்.அம்போலியில் உள்ள அம்போலி அருவியைப் பார்த்து விட்டு அங்கிருந்து கோவா நோக்கி பயணம்.


கோவாவில் செயிண்ட் சேவியர் கதீட்ரலையும் அருகிலிருக்கும் போம் ஜீஸஸின் பஸிலிக்காவையும் காணுதல். அங்கிருந்து உடுப்பி வழியாக பெங்களூரு திரும்புதல்.


பயண பாதையை கூகிள் வரைபடத்தில் காண இங்கே சொடுக்கவும்.


தோராயமான பயண வரைபடம்:



No comments:

Post a Comment

அருகர்களின் பாதை

ஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து துவங...