Monday, December 4, 2017

தஞ்சை தரிசனம்

தஞ்சை தரிசனம் என பெயரிடப்பட்ட இந்த பயணக்கட்டுரைகளில், தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள வரலாற்று பின்னணியுள்ள பல இடங்களின் குறிப்புகள் தொகுக்கப்பட்டு உள்ளன.

2010-ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி திருச்சியிலிருந்து துவங்கி அக்டோபர் 22ம் நாள் திருச்சி வந்து சேரும்வரையிலான 7 நாட்கள் பயணத்தின் குறிப்புகள் 7 கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளன. பயண தூரம் ஏறத்தாழ 450 கி.மீ.


திருச்சியிலிருந்து நேராக கொடும்பாளூர் சென்று அங்கு, கொடும்பாளூரின் முக்கியமான வரலாற்றுச்சின்னங்களான மூவர்கோயில் மற்றும் முகுந்தேஸ்வரர் கோயிலைக் காணுதல்.


பின், அங்கிருந்து காலடிப்பட்டி வழியாக குடுமியான் மலை. குடுமியான் மலையின் சமணப்படுக்கைகள் கொண்ட குகைகள், சிகாநாதசுவாமி கோயில் மற்றும் குடுமியான்மலை கல்வெட்டுகளை பார்த்துவிட்டு மீண்டும் காலடிப்பட்டிதிரும்பி, பின் அங்கிருந்து சித்தன்னவாசல் பயணம். அன்னவாசல் என்ற இடத்தில் திரும்பி சித்தன்னவாசலுக்கு நேராகச் சாலை உள்ளது.


சித்தன்னவாசலில் கிமு இரண்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த குகைக்கோயில் ஒன்று உள்ளது. அதைப் பார்த்துவிட்டு அங்குள்ள சமணர் தங்கும் குகைகளையும் காணுதல்.


சித்தன்னவாசலில்இருந்து புதுக்கோட்டையை அடைந்து பின் அங்கிருந்து திருமயம் சென்று புகழ்பெற்ற திருமயம் கோட்டையைப் பார்த்தால்.


பின், புதுக்கோட்டை வழியாக நார்த்தாமலைக்கு பயணம். நார்த்தாமலைப் பகுதி மொத்தம் ஒன்பது மலைகளைக் கொண்டது. கடம்பர் மலையில் முதலாம் ராஜராஜன் கட்டிய சிவன் கோயில் உள்ளது. மலைக்கடம்பூர்த்தேவர். பிற்பாடு பாண்டியன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டிய அருகே நகரீஸ்வரம் என்ற சிவன்கோயிலும் மங்களாம்பிகை கோயிலும் உள்ளன.அவற்றைப் பார்த்துவிட்டு, கீரனூர் வழியாக மலையடிப்பட்டியை நோக்கி பயணம். அங்கு, விஜயாலயசோழன் காலகட்டத்து பெருமாள்கோயில் ஒன்று உள்ளது. அதைப்பார்த்துவிட்டு தஞ்சைக்குப்  பயணம்.


தஞ்சையில் பெரிய கோவில் மற்றும் அரண்மனையை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி திருவையாறு செல்லுதல். திருவையாறுக்கு மையமாக உள்ளது ஐயாறப்பன் அல்லது பஞ்சநதீஸ்வரர் கோயிலைப் பார்த்துவிட்டு பின் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தியாகராஜர் சமாதியை காணுதல்.


திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி கோயிலுக்கு சென்று பின் அங்கிருந்து திருமழபாடியை அடைதல். திருமழபாடியில் புகழ்பெற்ற வைத்தியநாதர்(சிவன்) கோவிலுக்கு செல்லுதல்.


திருமழபாடியிலிருந்து கிளம்பி தாராசுரம் அடைந்து அங்குள்ள ஐராவதேஸ்வரர் கோயிலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து பட்டீஸ்வரம் சென்று சிவன் கோவிலைக் காணுதல். பட்டீஸ்வரத்தில் இருந்து கிளம்பி உடையாளூர் சென்று அங்கிருக்கும் ராஜராஜசோழனின் சமாதியைக் காணுதல்.



https://upload.wikimedia.org/wikipedia/commons/9/99/A_different_view_of_Airavatesvara_Temple.jpg


அங்கிருந்து கங்கை கொண்ட சோழபுரம் சென்று, புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மற்றும் அருகில் உள்ள அரண்மனை மேட்டினைப் பார்த்துவிட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் சென்று அங்கிருந்து வீராணம் சென்று பரந்து விரிந்த வீரநாராயணன் ஏரி அல்லது வீராணம் ஏரியைக் காணுதல்.


பின், திருவாரூரை அடைந்து அங்குள்ள கமலாலயக் குளம் மற்றும் தியாகராஜர் கோவிலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து மன்னார்குடிக்கு சென்று புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி கோவிலைக் காணுதல். திருபுவனம் சென்று அங்குள்ள கம்பஹரேஸ்வரர் ஆலயத்தைப் பார்த்துவிட்டு, திருவிடைமருதூர் சென்று மகாலிங்கேஸ்வரர் கோயிலைக் காணுதல்.


பயணத்தின் இறுதி நாளன்று குடந்தை என்கிற கும்பகோணம் செல்லுதல். கும்பகோணத்தில் மிக முக்கியமான கோயில்கள் நான்கு. கும்பேஸ்வரர், சாரங்கபாணி, சக்ரபாணி,ராமசாமி கோயில்கள். புராதனமானது கும்பேஸ்வரர் கோயில்.நான்கு கோவில்களையும் பார்த்துவிட்டு மாயவரம் வழியாக பூம்புகார் சென்று அங்கு காவேரி கழிமுகத்தைப் பார்ப்பதோடு பயணம் நிறைவுறுகிறது. 


தஞ்சை தரிசனம் – 1 : http://www.jeyamohan.in/8901#.WiZNYYSH9j5

தஞ்சை தரிசனம் – 2 : http://www.jeyamohan.in/8907#.WiZQ_YSH9j4
தஞ்சை தரிசனம் – 3 : http://www.jeyamohan.in/8914#.WiZkIISH9j4
தஞ்சை தரிசனம் – 4 : http://www.jeyamohan.in/8927#.WiZkNoSH9j4
தஞ்சை தரிசனம் – 5 : http://www.jeyamohan.in/8940#.WiZkP4SH9j4
தஞ்சை தரிசனம் – 6 : http://www.jeyamohan.in/8949#.WiZkOoSH9j4
தஞ்சை தரிசனம் – 7 : http://www.jeyamohan.in/8963#.WiZkR4SH9j4

கூகிளில் பயண பாதையைக் காண இங்கே சொடுக்கவும்.


பயண வரைபடம்:





http://udiyalur.blogspot.in/2010/06/blog-post_11.html

No comments:

Post a Comment

அருகர்களின் பாதை

ஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து துவங...