Sunday, November 19, 2017

நன்றி!

சமகால தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத படைப்பாளி எழுத்தாளர் ஜெயமோகன். இலக்கியம் மட்டும் அல்லாது தத்துவம், திரைப்படம் என பல்வேறு தளங்களில் தொடர்சியாக இயங்கி வந்தாலும் கூட அவர் அளவிற்கு ஒருவரால் பயணம் மேற்கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. இந்தவரிகள் மிகை உணர்சிக்காக சொல்லப்படவில்லை.  இமயம் முதல் குமரிவரை, வட கிழக்கு மாநிலங்கள், வெளி நாடுகள், பருவமழை பயணம் என இந்த பரந்த தேசத்தின் குறுக்கு மற்றும் நெடுக்கு வெட்டாக அவர் மேற்கொண்ட பயணங்களின் குறிப்புகள் தொடர் கட்டுரைகளாக எழுத்தாளர் ஜெயமோகன் இணைய தளத்தில் காணக்கிடைக்கின்றன. படிப்பவர்களுக்கெல்லாம் உள்ளுற ஏக்கத்தையும், ஆர்வத்தையும் ஒரு சேர கலந்து கொடுக்கின்றன இக்கட்டுரைகள் .


 படம்: jeyamohan.in

நவீன உலகின் முன்னேற்றம் அடைந்து வரும் பொருளீட்டும் வாய்ப்புகள், தொலைத்தொடர்பு மற்றும் சாலை வசதிகள் போன்றவை இது போன்ற பயணங்களை இந்த தலைமுறையினருக்கு இன்னும் சாத்தியமாக்கி இருக்கின்றன. ஒரு பயணியாக கூகிள் வரைபட தொழில்நுட்பத்தின் வசதியை பயன்படுத்தி இப்பயணக் குறிப்புகளில் உள்ள வழித்தடங்கள், சந்திப்புகள் மற்றும் இடங்கள் என அனைத்தையும் முடிந்தவரை ஒழுங்குபடுத்தி இந்த பக்கத்தில் தொகுத்து வைத்து உள்ளேன். பயண ஆர்வலர்களுக்கு நிச்சயமாக இது பயன்படும் என்று நினைக்கிறேன்.


குறிப்பு : காப்புரிமைக் காரணங்களால் கட்டுரைகள் பகுதியாகவோ அல்லது முழுத்தொகுதியாகவோ இங்கே பகிரப்படாது. தொடர்புடைய கட்டுரைகளின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்படும். 


நன்றிகளுடன்,

தினேஷ்

1 comment:

  1. நல்ல முயற்சி.பயணங்களில் விருப்பமுள்ள எனக்கு இத்தொகுப்பு மிக்க பயனளிக்கிறது.நன்றி

    ReplyDelete

அருகர்களின் பாதை

ஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து துவங...