Monday, November 20, 2017

மையநிலப் பயணம்

மையநிலப் பயணம் என்று பெயரிடப்பட்ட இந்த பயணக்கட்டுரைகள் 2017 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில்  எழுத்தாளர் ஜெயமோகன் அவரது நண்பர்களோடு மத்திய பிரதேச மாநிலத்தில் மேற்கொண்ட தொடர் பயணக் குறிப்புகளை  கொண்டுள்ளது.

இந்திய தேசத்தின் மத்திய நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தில் வரலாறு சிறப்புமிக்க பாரம்பரிய சின்னங்கள், கோவில்கள் மற்றும் அரண்மனைகள் பற்றிய தகவல்கள் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன. 11 தனி கட்டுரைகளாக விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.


மையநிலப் பயணம் -1 : http://www.jeyamohan.in/103224#.WhLurkqWbIV

மையநிலப் பயணம் -2 : http://www.jeyamohan.in/103266#.WhLwvkqWbIU
மையநிலப் பயணம் -3 : http://www.jeyamohan.in/103292#.WhLwjEqWbIU
மையநிலப் பயணம் -4 : http://www.jeyamohan.in/103309#.WhLwhUqWbIU
மையநிலப் பயணம் -5 : http://www.jeyamohan.in/103336#.WhLwgUqWbIU
மையநிலப் பயணம் -6 : http://www.jeyamohan.in/103367#.WhLwTUqWbIU
மையநிலப் பயணம் -7 : http://www.jeyamohan.in/103438#.WhLwSEqWbIU
மையநிலப் பயணம் -8 : http://www.jeyamohan.in/103461#.WhLuuUqWbIU
மையநிலப் பயணம் -9 : http://www.jeyamohan.in/103506#.WhLvJkqWbIU
மையநிலப் பயணம் -10 : http://www.jeyamohan.in/103570#.WhLxEEqWbIU
மையநிலப் பயணம் -11 : http://www.jeyamohan.in/103593#.WhLviEqWbIU

பயணம் ஆரம்பிக்கும் இடம் : இந்தூர், மத்திய பிரதேசம்


இந்தூரில் இருந்து கிளம்பி ஓம்காரேஸ்வர் (77 கி.மீ) அடைந்து அங்கு நர்மதை நதிகே கரையின் அமைந்துள்ள ஓம்காரேஸ்வர் ஆலயம், சித்தேஸ்வரர் ஆலயம் பார்த்துவிட்டு பின் காண்ட்வா வழியாக நேமவார் (279 கி.மீ) அடைந்து அங்குள்ள சித்தேஸ்வரா ஆலயம் மற்றும் நர்மதை நதிக்கரையை காணுதல்.


அடுத்ததாக பயணத்தின் முக்கிய இடமான பிம்பேத்கா சென்று அங்குள்ள பிம்பேத்கா குகைகளை பார்த்துவிட்டு பின் பச்மாரி (546 கி.மீ) அடைந்து குடைவரைக் கோயில்கள், குகை ஓவியங்கள் (முன் அனுமதி பெற்று காண வேண்டும்) காணுதல்.





பின், ஜபல்பூரிலிருந்து (796 கி.மீ) 15 கிமீக்கு அப்பால் உள்ள பேடாக்கட் சென்று அங்கே நர்மதை நதி அருவியாக விழுவதை காணுதல். அங்கிருந்து தமோ என்னும் இடத்தில் அமைந்த சித்தேஸ்வரர் ஆலயத்தை பார்ப்பது. பின் சௌசாத் யோகினி ஆலயம் செல்வது.


குவாலியர் செல்லும் வழியில் ஜராய் கா மத் என்னும் கோவில். இது உத்திர பிரதேசத்தில் உள்ள பருவா சாகர் என்ற ஊரில் அமைந்துள்ளது. அருகில் உள்ள ஓர்ச்சா (1115 கி.மீ) என்னும் ஊரை அடைந்து அங்குள்ள ராஜா மஹால் அரண்மனையை பார்ப்பது.


பின், குவாலியரைக் கடந்து படேஸ்வர்  செல்லுதல். அங்குள்ள கிபி 8ம் நூற்றாண்டில் ஆலயங்களைக்  காணுதல். அங்கிருந்து கிளம்பி, குவாலியரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள பாதோலி என்னும் பெரிய ஊரின் அருகே மிதொலி என்னும் சிறு கிராமத்தில் உள்ள சௌசாத் யோகினி ஆலயம்.


குவாலியரிலிருந்து கிளம்பி (1698 கி.மீ) தொலைவில் உள்ள சந்தேரி ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க இடம். கிபி பத்தாம் நூற்றாண்டு முதல் அங்கிருக்கும் கோட்டையை காணுதல்.


இந்தூருக்கு திரும்பி வரும் வழியில், புகழ்பெற்ற விதிஷாவுக்கு செல்லுதல். விதிஷா பௌத்த வரலாற்றில் மிகமுக்கியமான இடம். இறுதியாக இந்தூரை வந்து சேர்த்தல்.


மொத்த பயண தூரம் ஏறத்தாழ 2200 கி.மீ.



மேலதிக தகவல்களுக்காக பிற இணைப்புகள்:

https://en.wikipedia.org/wiki/Omkareshwar

http://asibhopal.nic.in/monument/dewas_nemawar_sidheshwartemple.html
http://asi.nic.in/asi_monu_whs_rockart_bhimbetka_detail.asp
http://www.wondermondo.com/Countries/As/India/MadhyaPradesh/PandavPachmarhi.htm
https://en.wikipedia.org/wiki/Dhuandhar_Falls
https://en.wikipedia.org/wiki/Chausath_Yogini_Temple,_Jabalpur
https://en.wikipedia.org/wiki/Jarai-ka-Math
https://en.wikipedia.org/wiki/Orchha_Fort_complex
https://en.wikipedia.org/wiki/Bateshwar,_Morena
https://en.wikipedia.org/wiki/Chanderi_fort
https://en.wikipedia.org/wiki/Vidisha

No comments:

Post a Comment

அருகர்களின் பாதை

ஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து துவங...